முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் சீற்றம் அதிகரிப்பு! கரையை நோக்கி வந்த கடல் நீர்
முல்லைத்தீவு, அம்பலவன் பொக்கணை கடற்பரப்பில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கடல் நீர் கரையை நோக்கி வந்துள்ளதால் கடற்றொழிலாளர்கள் தமது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வருகின்றனர்.
இதேவேளை நேற்றையதினம் (26.10.2026) காலை கடற்றொழிலுக்கு சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
தேடுதல் நடவடிக்கை
கடற்படையின் இரண்டு விசேட படகுகள் தேடுதல் நடவடிக்கைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,. மேலும், திருகோணமலையிலிருந்து மற்றுமொரு விசேட படகும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், அந்தப் படகு தற்போது முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் அந்தப் படகு முல்லைத்தீவை வந்தடைந்ததும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
அதேவேளை, காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் நடவடிக்கையில் இலங்கை விமானப்படையினரும் இணைந்து செயற்படவுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

