கிராமிய பகுதிகளிலும் கோவிட் தொற்று பரவுகை அதிகரிப்பு
கிராமிய பகுதிகளிலும் கோவிட் தொற்று பரவுகை அதிகரிப்பு பதிவாகி வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நகரப் பகுதிகளில் அதிகளவான கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகி வந்ததாகவும் தற்பொழுது அந்த நிலைமை கிராமிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை கடுமையான பின்பற்றுவதன் மூலம் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் மற்றுமொரு முடக்க நிலையை தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் முடக்கங்கள் காரணமாக நாடு பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மற்றுமொரு முடக்கத்திற்கு செல்வது நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்யும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |



