மஸ்கெலியாவில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா நகரம் மற்றும் கிலன்டில் தோட்டத்திலும் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேயிலை மலைகளில் தொழில் புரியும் இவர்கள் தமது பகல் உணவையும் காலையிலே தயாரித்து தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு இவர்களால் தயாரிக்கப்படும் உணவுகளை மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தை அண்டி வாழும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உண்டு விட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பாடசாலை முடிந்து வரும் தமது பிள்ளைகள் பட்டினியுடன் தாம் வரும் வரை காத்திருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு, நகரங்களில் உள்ள கடைகளுக்கும் சென்று உணவு வகைகளை எடுத்து செல்வதாகவும், கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தை அண்டி காணப்படும் சிறிய காட்டு பகுதிகளில் இருந்தே குரங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை அறிவித்தும் இதுவரை எவரும் கவனத்திற்கொள்ளவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நகர வர்த்தகர்கள் மற்றும் தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan