மட்டக்களப்பில் அதிகரித்துள்ள டெங்கு நோய் தாக்கம் - 149 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில் மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் சுத்தம் செய்யும் நடவடிக்கை வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ஆம் திகதி வரை டெங்கு நுளம்பு பெருகுவதற்கு வசதியாக இடங்களைச் சுத்தம் இல்லாமல் வைத்திருந்த 626 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அவை சீர்செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வருடம் 149 பேருக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அத்தோடு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் 2021ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி வரை 258 நபர்களுக்கு எதிராக பொலிஸ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.










புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 30 நிமிடங்கள் முன்

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
