தேர்தல் தொடர்பான குற்றங்களுக்கு அபராதத் தொகை அதிகரிப்பு
நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள, மனுவில் தேர்தல் தொடர்பான குற்றங்களுக்கு அபராத தொகைகள் கடுமையாக அதிகரிக்கப்படவுள்ளன.
ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச யோசனைபடி, தேர்தல் தொடர்பான குற்றங்களுக்கான அபராதத் தொகை 50,000 முதல் 400,000 ரூபாய் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளைச் சட்டம், நாடாளுமன்ற தேர்தல் சட்டம், ஜனாதிபதி தேர்தல் சட்டம் மற்றும் மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து, தேர்தல் தொடர்பான குற்றங்களுக்கான அபராதத்தை அதிகரிக்க இந்த யோசனை முன்மொழியப்படுவதாக தெரிய வருகிறது.
அனுமதிக்கப்பட்ட காலத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை
தேர்தல் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட காலத்தை 21 நாட்களில் இருந்து
42 ஆக இரட்டிப்பாக்கவும் இந்த மனுவில் யோசனை முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உதாரணமாக, சட்டவிரோத தேர்தல் ஊர்வலங்களில் பங்கேற்பதற்கான அபராதம் 100 ரூபாயில் இருந்து 50,000. ஆக உயர்கிறது.
வாக்காளர்களின் வாக்குகளைப் பதிவு செய்யும் போது, வாக்காளர்களுக்கு இடையூறு விளைவிப்பதன் மூலமோ, வாக்காளர் வாக்களிக்கவுள்ள அல்லது வாக்களித்த வேட்பாளர் குறித்த தகவல்களைப் பெறுவதன் மூலமோ, அல்லது வாக்களிக்கத் தூண்டுவதன் மூலமோ, தேர்தலில் இரகசியம் பேணுதல் தொடர்பான விதிகளை மீறுவோருக்கு 200,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |