கோவிட் தொற்றுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மற்றும் ஒரு ஆபத்து
கோவிட் வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் டெங்கு நோய் பரவுவதும் அதிகரித்துள்ளதால், மக்களின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவின் மருத்துவர் இந்திக வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோவிட் தொற்று நோய் பரவி வரும் நிலையில், காய்ச்சல், உடல் வலி போன்ற நோய் அறிகுறிகள் இருக்குமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு வீரசிங்க பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த மாதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி கூறியுள்ளார்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும் இந்த ஆண்டில் இதுவரையான காலத்தில் 7 ஆயிரத்து 674 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பன்னிலஹெட்டி குறிப்பிட்டுள்ளார்.
You My Like This Video