அதிகரித்துள்ள கோவிட் மரணங்கள்! - அனைத்து சுடுகாடுகளும் 24 மணி நேரமும் செயல்பட முடிவு
கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால், மருத்துவமனை பிணவறைகளில் ஏற்படும் இடப்பற்றாக்குறையை குறைப்பதற்காக களுத்துறை மாவட்டத்தில் அனைத்து சுடுகாடுகளும் 24 மணி நேரமும் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் உதய ரத்நாயக்க இதை தெரிவித்துள்ளார்.
களுத்துறை தலைமை அரசாங்க அதிபர் பிரசன்ன கினிகேயுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த முடிவு குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா கமேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கோவிட் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பலர், தேசிய ஒளடதங்களை தினந்தோறும் பயன்படுத்துகின்றனர்.
அது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்குக் காரணமாய் அமைந்துள்ளது என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும், தேசிய ஒளடதங்களை தினம்தோறும் பயன்படுத்தல் மற்றும் முகத்துக்கு நீராவி பிடித்தல் போன்றவை, நோய்த் தொற்றுக்குள்ளாவதைத் தடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.