மட்டக்களப்பில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள் தொடர்பில் அதிர்ச்சி அறிக்கை
இலங்கையில், தவறான முடிவெடுத்து உயிரை மாய்ப்போரின் பட்டியலில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாம் இடத்தினை கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலக தற்கொலை தடுப்பு தினம் 2025 குறித்து ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் இதனை கூறியுள்ளார்.
பொது விழிப்புணர்வு
வைத்தியசாலை உளநல வைத்திய நிபுணர் ஆர்.கமல்ராஜ், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உளநல பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி சௌந்தரராஜன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள உளநல பிரிவின் வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது தவறான முடிவெடுத்து உயிரை மாய்ப்போர் தொடர்பான தடுப்பு குறித்த துல்லியமான, பாதுகாப்பான மற்றும் இரக்கமுள்ள செய்திகளை பரவலாகப் பரப்புவதை உறுதி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், மனநலம் மற்றும் சமூக ஆதரவின் முக்கியத்துவம் குறித்த பொது விழிப்புணர்வை வலுப்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கலச்துரையாடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக களங்கத்தைக் குறைப்பதற்கும் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் நேரடியாக பங்களிக்கவும், ஊடகவியலாளர்கள் செயற்படுதல் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





