சிரேஸ்ட பிரஜைகளுக்கு அதிகரிக்கும் கொடுப்பனவு..!
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குவதற்காக ரூ.15 பில்லியன் ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட (Budget - 2025) முன்மொழிவு குறித்து தற்போது நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள், சந்தையில் நிலவும் வட்டி விகிதங்களை விட, வருடாந்திர கூடுதல் வட்டி விகிதமான 3 சதவீதத்துடன், ரூ.1 மில்லியன் வரையிலான ஒரு வருட நிலையான வைப்புத்தொகைக்கு தகுதி பெறுவார்கள் எனவும் இது ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
அதேவேளை, ஆதரவின்றி இருக்கும் சிறுவர்களுக்கு 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2000 ரூபாவை அவர்களின் வங்கி கணக்கில் வைப்பிலிடவும் இந்த வேலைத்திட்டத்துக்காக் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri