நான் ஒருபோதும் அவ்வாறு சொல்லவில்லை! ஆனால் என் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது : பந்துல

Bandula Gunawardane Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Violence 2022 Sri Lanka Anti-Govt Protest
By Benat Dec 09, 2023 03:56 AM GMT
Report

என் மீது மக்களுக்கு பாரிய வெறுப்புக்கள் தோற்றம் பெற்றது. நான் ஒருபோதும் சொல்லாத விடயம் ஒன்றிற்காக எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ஊடகங்களில் நான் அதிகளவில் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளேன் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கனடாவில் பெண் உட்பட நான்கு தமிழர்கள் கைது

கனடாவில் பெண் உட்பட நான்கு தமிழர்கள் கைது

தீக்கிரையாக்கப்பட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

கடந்த ஆண்டு போராட்டத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, இவர் 2,500 ரூபாவால் வாழ முடியும் என்று குறிப்பிட்டவர் ஆகவே இவரின் வீட்டுக்கு தீ வைக்க வேண்டும்  என்று குறிப்பிட்டுக் கொண்டு போராட்டகாரர்கள் எனது வீட்டுக்கு தீ வைத்தார்கள்.

நான் ஒருபோதும் அவ்வாறு சொல்லவில்லை! ஆனால் என் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது : பந்துல | Increased Allowance

ஊடகங்களினால் தான் விமர்சிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டேன். ஒரு மாத செலவுக்கு 2,500 ரூபா போதும் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை. அவ்வாறு நான் குறிப்பிட்டதாக ஊடகங்கள் திரிபுப்படுத்தி குறிப்பிட்டு என் மீது வெறுப்பை தோற்றுவித்தன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் நான் கல்வி அமைச்சராக பதவி வகித்தேன். அப்போது கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான மாத கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஆராய்ந்து நான் அமைச்சரவைக்கு யோசனை ஒன்றை முன்வைத்து கொடுப்பனவு அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன்.

இதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு முதல் ஜனவரி மாதம் முதல் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத கொடுப்பனவை 500 ரூபாவால் அதிகரித்து 3,000 ரூபா கொடுப்பனவை வழங்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் ஒருமாத செலவுக்கு 2,500 போதும் என்று நான் குறிப்பிட்டதாக வதந்தி பரப்பி விடப்பட்டது. இதனால் என்மீது பாரிய வெறுப்புக்கள் மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றது.இவ்வாறான நிலை ஊடக நெறி கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமானது என குறிப்பிட்டார். 

தேங்காய் எண்ணெய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேங்காய் எண்ணெய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்னிலங்கையில் கடத்தப்பட்ட நபர் மீது துப்பாக்கிச்சூடு

தென்னிலங்கையில் கடத்தப்பட்ட நபர் மீது துப்பாக்கிச்சூடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US