தொடரும் டொனால்ட் ட்ரம்பிற்கான அதிர்ச்சிகள்! அமெரிக்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கை அவருடைய நாட்டு மக்களுக்கே பெரும் சுமையாக மாறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கை தொடர்பான அறிவிப்பின் பின்னர், அமெரிக்க சந்தையில் அனைத்து நுகர்வோர் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வரிக் கொள்கை
ட்ரம்பின் வரிக் கொள்கை காரணமாக, அமெரிக்காவிற்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதன் எதிரொலியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அமெரிக்காவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 5ஆம் திகதி முதல், அமெரிக்காவில் கோப்பியின் விலை கணிசமாக அதிகரித்து, கோப்பி இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
கோப்பி இறக்குமதிக்காக ஆண்டுதோறும் அமெரிக்கா சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலரை செலவிடுகின்றது. இதில் அதிக அளவான கோப்பி பிரேசில் மற்றும் கொலம்பியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
கோப்பியின் விலை
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அமெரிக்க சந்தையில் கோப்பியின் விலை சுமார் மூன்று டொலர் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பல நாடுகள் மீது விதித்த வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
