பெரியகல்லாறில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தனிமைப்படுத்தலில் 95 குடும்பங்கள்

Independent Writer
in மருத்துவம்Report this article
மட்டக்களப்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் 4 பேர், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் பெரியகல்லாறில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதாகவும் 95 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளர் அழகையா லாதாகரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 22ஆம் திகதி, செட்டிப்பாளையத்தில் இடம்பெற்ற விபத்தினை தொடர்ந்து அதில் பயணம் செய்த இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில், அவர்களின் குடும்பத்தினை சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் இருவர் அடையாளப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களைத் தொடர்ச்சியாக அன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமையும் (25) முன்னெடுக்கப்பட்டு வருவதோடு தொற்றுக்குள்ளான 11பேரும் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நேற்று வியாழக்கிழமை(24) பெரியகல்லாறு பகுதியில் 27பேர் அன்டிஜன் சோதனைக்குப்படுத்தப்பட்ட நிலையில் நான்கு பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், நான்கு பேரும் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்களெனவும் முன்னர் அடையாளம் காணப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் பெரியகல்லாறு கலைமகள் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிக்குள் நுழைவதும் வெளியேறுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பெரியகல்லாறு பகுதியில் பொதுமக்கள் தேவையற்ற வகையிலான நடமாட்டங்களைக் குறைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகல்லாறிலுள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் நடமாட்டமும் குறைந்துள்ளதோடு பொலிசார், படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
