இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை 57 இலட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக(University of Peradeniya) பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள( Vasantha Athukorala) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் உலக வங்கியினால்(World Bank) வெளிப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.
உலக வங்கி கணிப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி , வருமானமின்மை , தொழிலின்மை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவை இதற்குக் காரணம்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு இதன் எண்ணிக்கை மூன்று இலட்சமாகக் குறையலாம் என உலக வங்கி கணித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |