பொலன்னறுவை நீர்த்தேக்கங்களின் அதிகரித்த நீர்மட்டம் : பொதுமக்கள் பாதிப்பு
பொலன்னறுவை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு காரணமாக கந்தளாய் சூரியபுர வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்கலில் இருந்து, வெளியேற்றப்படும் நீர் காரணமாக நீர்மட்டம் அதிகரித்து, கந்தளாய் பகுதியில் உள்ள சூரியபுர, சேருநுவர மற்றும் சிறிமங்கலபுர பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
உயிரிழக்கும் கால்நடைகள்
இதனால், சேருவில-கண்டி பிரதான வீதியில் சுமார் இருபது கிலோமீட்டர் தூரம் வரை வீதி இருபக்கமும் காட்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகாவலி கங்கை வனவிலங்கு பாதுகாப்பு எல்லைப் பகுதியில் கால்நடைகளுக்கு போதுமான மேச்சல் தரை இன்மையால், கால்நடைகள் இறந்துள்ளதாகவும் பண்ணை தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து வெள்ளம் வருவதனால், விவசாய கிராமங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்