கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை
கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விஷேட கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, கிராம அலுவலருக்கு வழங்கப்பட்ட அலுவலக கொடுப்பனவு மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவு 01.04.2024 முதல் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
உதவித் தொகை
மேலும், மாதாந்த அலுவலக கொடுப்பனவு மாநகர சபை அல்லது நகரசபை பிரதேசத்தில் ரூபா 3000 ஆகவும் பிரதேச சபை பகுதியில் 2000 ரூபாவாகவும் திருத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டுக்கான எழுதுபொருள் உதவித் தொகை 3000 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு அமைச்சர் சபையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அசோக பிரியந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |