மரக்கறிகளின் விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்
நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறி விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய மழைக்கால நிலைமை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பைத் தொடர்ந்து, சந்தைக்கு வரும் மரக்கறிகளின் அளவு குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இலங்கைக்கு வடகிழக்கில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சிவப்பு எச்சரிக்கையுடன் அவசர அறிவுறுத்தல்
இரண்டு நாட்களாக நிலவும் கடும் மழை
பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபாசேன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தற்போது ஓரளவு மரக்கறி விநியோகம் உள்ள போதிலும், வரும் நாட்களில் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவக்கூடும்.

விநியோகம் குறையும் போது சந்தையில் மரக்கறி விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நிலவும் கடும் மழையினால் மக்கள் சந்தைக்கு வருவது குறைந்துள்ளதோடு, விற்பனை நடவடிக்கைகளும் மந்தகதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.