இலங்கையில் பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 527 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,759 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 218,893 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரையில் 184,090 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், நாட்டில் இதுவரையில் 2,011 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கமைய,நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam