வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
இதேவேளை 2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 2024 செப்டெம்பர் மாதத்தில் 28,344 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ள நிலையில், கடந்த 2023 செப்டெம்பர் மாதத்தில் 25,716 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 17,649 தொழிலாளர்கள் தொழில்சார் வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் அரை திறன் பயிற்சி வேலைகளுக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3,704 என கூறப்பட்டுள்ளது.
பயிற்சி
2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் சவூதி அரேபியாவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன் இவர்களின் எண்ணிக்கை 38,133 ஆகும்.
இதேவேளை, 5,870 பேர் தென் கொரியாவிற்கும், 5,677 பேர் குவைட் நோக்கியும், 3995 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பணி நிமித்தமாக சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த காலப் பகுதியில், 6,391 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்றுள்ளதுடன் 6,295 இலங்கையர்கள் ஜப்பானுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.