இலங்கைக்கு வரும் பணத்தின் அளவு அதிகரிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்கான வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் 2022 மார்ச் மாதத்தில் சிறிய அதிகரிப்பு கண்டுள்ளது.
பெப்ரவரியில் 205 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கை தொழிலாளர்களின் பணம் மார்ச் மாதத்தில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
மார்ச் 2021 இல் இலங்கை பெற்ற 612 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட இந்த தொகை இன்னும் குறைவாகவே உள்ளது. மார்ச் மாத தொடக்கத்திலிருந்து இலங்கை நாணயத்தை மிதக்க மத்திய வங்கி முடிவு செய்ததை அடுத்து இந்த சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,



