இரண்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி செயற்திறனில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
கடந்த இரண்டு மாதங்களில், ஆடை ஏற்றுமதி வருவாயில் நேர்மறையான முன்னேற்றம் காணப்படுவதாக ஒன்றிணைந்த ஆடைத் கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு, ஆடை ஏற்றுமதி வருவாய், ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் ஆரம்ப இலக்கான 4.5 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆடை ஏற்றுமதி வருவாய்
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆடை ஏற்றுமதி வருமானம் 299.1 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததுடன் ஆகஸ்ட் மாதத்தில் 485.6 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆடை ஏற்றுமதி வருவாய் 2022 ஆம் ஆண்டிற்கு இணையாக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், ஈட்டிய வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை அவதானிக்க முடிந்துள்ளது என அந்த சங்கம் கூறியுள்ளது.
மேலும் ஆடை ஏற்றுமதி வருவாயில் நேர்மறையான முன்னேற்றம் காணப்படும் நிலையில், தற்போது 5 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டுவதற்காக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.