அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் : நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம், மேலதிக கொடுப்பனவு, பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்வடவாறு குறிப்பிட்டார்.
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சேவை பாதுகாப்பு தன்மை, காப்புறுதி மற்றும் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய போதுமான சம்பளம் தொடர்பில் தெளிவான முறைமை ஒன்று நாட்டின் சட்ட கட்டமைப்பில் இல்லை.
வருமான வரி திருத்தப் பிரச்சினை, நுகர்வோர் செலவு தொடர்பான அழுத்தம், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முறைமை, தொழில் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தனியார் துறை ஊழியர்கள் முகம்கொடுத்து வருகின்றனர்.
பால் இன சமத்துவம் உள்ளிட்ட முகம்கொடுத்துவரும் சவால்களுக்கு நாட்டில் தேசிய தொழில் கொள்கை ஒன்று இருக்க வேண்டும்.
குறிப்பாக, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவை செய்துவரும் எமது மக்களின் தொழில் உரிமை, பாதுகாப்பு, மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அதனால் தேசிய தொழில் பாதுகாப்பு கொள்கை ஒன்றை முன்வைத்து தனியார் துறையில் இருக்கும் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |