அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும்: நிதி அமைச்சு உறுதி
இந்த வருடம் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் எவ்வளவு சம்பளம் உயர்த்தப்படும் என்பது வரவு செலவுத் திட்டத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும், அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.
சம்பள அதிகரிப்பு அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
