யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Jaffna Sri Lanka Dengue Prevalence in Sri Lanka P. S. M. Charles
By Kajinthan Dec 14, 2023 03:24 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இன்று (14.12.2023) நடைபெற்ற டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்திலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மீளாய்வு கூட்டமானது யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட நடிகை ரம்பா குடும்பத்தினர் (Video)

யாழ்ப்பாணத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட நடிகை ரம்பா குடும்பத்தினர் (Video)

டெங்கு காய்ச்சல் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மிக குறைவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

எனினும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் காணப்படுவதாகவும் அந்தந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களும், சுகாதார துறைசார் அதிகாரிகளும் சூம்“zoom” ஊடாக தெரிவித்துள்ளனர்.

யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Increase In Number Of Dengue Patients Jaffna

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பிலும், டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் அதிகாரிகளால் ஆளுநருக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆலோசனை

அதற்கமைய, டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராமிய மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வடிகான் துப்பரவு ஒழுங்கு முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கைவிடப்பட்ட மற்றும் பராமரிப்பற்ற காணிகளில் நுளம்பு பெருகுவதை தடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Increase In Number Of Dengue Patients Jaffna

பராமரிப்பற்ற காணிகள் தொடர்பில், காணி உரிமையாளர்களுக்கு எதிராக விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளுக்காக பொலிஸ், முப்படைகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளுமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பிளாஸ்டிக் பொருள்களை மாணவர்கள் வகுப்புகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் எனவும், தினமும் காலை கூட்டத்தின் போது டெங்கு ஒழிப்பு தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், மாகாணத்திலுள்ள அனைத்து அரச திணைக்களங்களிலும் வாராந்தம் துப்பரவு பணிகளை மேற்கொள்ள திணைக்கள தலைவர்கள் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Increase In Number Of Dengue Patients Jaffna

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் என இதன்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளதுடன், பொலிஸ் நிலையங்களில் காணப்படும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளில் அறிவித்தல்களை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுற்றுசூழல் பாதுகாப்புக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கிராமிய மட்ட செயற்பாடுகளில் ஈடுபடுத்த முடியும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, வாராந்த கிராமிய மட்ட கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும், டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகளை அரச வைத்தியசாலைகளில் மேம்படுத்துமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Increase In Number Of Dengue Patients Jaffna

அத்துடன் வடக்கு மாகாணத்திற்குள் காணப்படும் தனியார் வைத்தியசாலைகளில் கடமைபுரியும் அரச வைத்தியர்களும், டெங்கு காய்ச்சல் தொடர்பில் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும், உரிய வைத்தியர்களுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்குமாறும் மாகாண சுகாதார சேவை பணிப்பாளருக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த மீளாய்வு கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கணகேஸ்வரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், மாவட்ட அரசாங்க அதிபர்கள், சுகாதார பணிமனைகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரடியாகவும், சூம்“zoom” ஊடாகவும் கலந்துக்கொண்டிருந்தனர்.

யாழில் இரு வயோதிபர்கள் மயங்கி விழுந்து மரணம்

யாழில் இரு வயோதிபர்கள் மயங்கி விழுந்து மரணம்

ஜனவரி முதல் இரட்டிப்பாகும் விலை உயர்வு : பெற்றோர்களுக்கு துயரமான செய்தி

ஜனவரி முதல் இரட்டிப்பாகும் விலை உயர்வு : பெற்றோர்களுக்கு துயரமான செய்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US