போசாக்கு குறைபாடு வீதம் அதிகரிப்பு: சுகாதார அமைச்சர் தகவல்
நாட்டில் போசாக்கு குறைபாடு வீதம் 2 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (12.10.2022) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போசாக்கு குறைபாடு வீதம்
மேலும் தெரிவிக்கையில்,“நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகளின் போசாக்கு நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு போசாக்கு குறைபாடு 2 வீதமாக அதிகரித்துள்ளது.
மேலும், நாம் அடுத்த ஐந்து அல்லது பத்து வருடங்களில் காணாமல் போய் விடுவோம். நம் குழந்தைகள் குறைந்த மனநலம் மற்றும் குறைந்த ஆற்றல் கொண்ட குழந்தையாக மாறினால் அதற்காக நாம் ஒருநாள் சபிக்கப்படுவோம்.
அடிப்படை தேவை
ஆகவே, போசாக்கு குறைபாட்டின் அடிப்படை தேவைகளை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
மக்களின் பசி, குழந்தைகளின் போசாக்கு குறைப்பாடு, கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவு என்பன எனக்கு அடிப்படை தேவையாக இருக்கின்றது”என தெரிவித்துள்ளார்.