இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை அதிகரிப்பு!
நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலுக்கு பின்னர் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை அதிகரித்துள்ளதாக வடமாகாண கடற்றொழில் இணையத்தின் செயலாளர் என்.எம் ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12.2.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் தொடக்கம் தெற்கு பகுதியாக இருக்கின்ற சௌத்பார்,வங்காலை,சிலாபத்துறை,முள்ளிக்குளம் அகிய கடற்பகுதிகளுக்கு தற்போது இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை அதிகரித்துள்ளது.
அத்துமீறிய வருகை
இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பாக நாங்கள் அரசுக்கு பல்வேறு விடயங்களை தெளிவு படுத்தினாலும்,அரசாங்கம் குறித்த விடயத்தை கண்டு கொள்வதாக இல்லை.

டித்வா புயலுக்கு பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்த்த நிலையில்,புயலின் பின்னர் அவர்களின் வருகை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.
அரசாங்கம் அவர்களின் வருகையை கட்டுப்படுத்தாமல்,குறித்த விடயத்தை கண்டு கொள்ளாமல் அரசாங்கம் அசமந்தமாக இருக்கிறது.
தடை செய்யப்பட்ட கடற்றொழில்
வடபகுதியில் தடை செய்யப்பட்ட தொழில் முறைமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அண்மையில் தபாலட்டைகள் ஊடாக ஜனாதிபதிக்கும்,கடற்றொழில் அமைச்சருக்கும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம்.

எமது கடற்றொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுகின்றனர்.எனவே குறித்த தொழில்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற காரணத்தை முன் வைத்தோம்.
தடை செய்யப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளினால் சிறு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.கரைவலை தொழிலும் பாதிக்கப்படுகின்றது.கடல் சூழலும் பாதிக்கப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.