உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு
எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என வரையறுக்கப்பட்ட இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை அதிகரித்துள்ள சூழ்நிலையில், இலங்கையிலும் எரிபொருளின் விலைகளை அதிகரிக்கும் அத்தியவசியம் எழுந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அதிகரிக்க வேண்டிய எரிபொருளின் விலைகளை குறிப்பிட்டு துறைக்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு அறிவித்துள்ளதாகவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் அண்மையில் எரிபொருளின் விலைகளை அதிகரித்தது. இதனையடுத்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அறிவித்தது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri