வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்று முதல் உயர்வு
வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்றைய தினம் முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு இணங்க இன்றைய தினம் முதல் வெளிநாட்டு தபால் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்னவை மேற்கோள்காட்டி அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கட்டண உயர்விற்கான காரணம்
எரிபொருள் விலை, டொலர் பெறுமதி, விமானக் கட்டணங்கள், பேருந்து மற்றும் புகையிரத கட்டண உயர்வு காரணமாக இவ்வாறு தபால் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளிநாட்டு தபால் கட்டண அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளின் பின்னர் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
| வெளிநாட்டுக்கான தபால் கட்டணம் அதிகரிப்பு |
இரண்டுமடங்காக அதிகரிக்கும் கட்டணம்

தற்போதைய கட்டணங்களை விடவும் இரண்டு மடங்காக வெளிநாட்டு தபால் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாட்டு விமான தபால் கட்டணங்களும் வெளிநாட்டு கப்பல் தபால் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam