கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்
இன்று நள்ளிரவு முதல் பல வகையான கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க இலங்கை உணவகங்கள் மற்றும் வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை உணவகங்கள் மற்றும் வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இன்று(04.11.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சீனி விலை அதிகரிப்பு
சீனி விலை அதிகரிப்பால் தேநீரின் விலை 5 ரூபாவினாலும் பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வினால், கொத்து மற்றும் பிரைட்ரைசின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
