அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள மின்சாரக் கட்டண உயர்வு குறித்த யோசனை
மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து யோசனையொன்று அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
பாரியளவில் நட்டம்
இலங்கை மின்சாரசபை பாரியளவில் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாக சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ தெரிவித்துள்ளார்.
நட்டத்தை குறைத்துக் கொள்ளும் நோக்கில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்களை உயர்த்த யோசனை
இலங்கை மின்சாரசபையின் மொத்த ஆண்டு வருமானம் 276 பில்லியன் ரூபா என்பதுடன் வருடாந்த செலவு 750 பில்லியன் ரூபாவாகும்.
இந்த இடைவெளியை குறைக்கும் நோக்கில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



