இளநீர் விலை அதிகரிப்பு
நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இளநீர் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இளநீர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கொழும்பில் உள்ள பல கடைகளில் இன்று (27) இளநீர் ஒன்று 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இளநீர் விலை
வெளிநாட்டவர்கள் அதிக விலைகளில் பழங்களை வாங்கி அருந்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் இளநீர் ஒன்றின் விலை 120 முதல் 140 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |