தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம்

Mahinda Yapa Abeywardena Sri Lankan Peoples
By Dhayani Sep 12, 2024 12:41 AM GMT
Report

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் நேற்று (11) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார்.

இதன் படி, தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது இது குறைந்தபட்ச சம்பளமாக கருதப்பட வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை முதலாளிகள் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் தமது ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்த சம்பளமாக 17,500 ரூபாவையும், 2005 ஆம் ஆண்டின் 36 மற்றும் 2016 இல 4 ஆம் இலக்க வரவு செலவுத் திட்ட நிவாரணச் சட்டங்களின் மூலம் 3,500 ரூபா கொடுப்பனவுகள் உட்பட 21,000 ரூபாவையும் வழங்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்சவின் பிரசார கூட்டத்தின் மீது கல் வீச்சு

நாமல் ராஜபக்சவின் பிரசார கூட்டத்தின் மீது கல் வீச்சு

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் | Increase In Basic Salary Private Workers Sri Lanka

தொழிலாளர்களின் எதிர்கால வைப்பு நிதி

புதிய குறைந்தபட்ச சம்பளமானது தொழிலாளர்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் அறக்கட்டளை மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அனைத்து தனியார் துறை தொழிலாளர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைப்படுத்தியது.

இச்சட்டம் ஆரம்பத்தில் மாதச் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 10,000 ரூபாயாகவும், நாளாந்த தொழிலாளர்களுக்கு 400 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் 2021 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தம் மூலம், ஆகஸ்ட் 2021 முதல் குறைந்தபட்ச மாத ஊதியம் 12,500 ரூபாயாகவும், தினசரி ஊதியம் 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் மாற்றம் | Increase In Basic Salary Private Workers Sri Lanka 

பொருளாதார நெருக்கடி

நாட்டில் ஏற்பட்டுள்ள அண்மைய பொருளாதார நெருக்கடியுடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, 2021 ஆம் ஆண்டிலிருந்து தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில் அதிகரிப்பு இல்லை என தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் பல தடவைகள் கலந்துரையாடிய பின்னர்,  குறைந்தபட்ச ஊதியம் 12,500 ரூபாயில் இருந்து 17,500 ரூபாவினால் உயர்த்துவதற்கான சட்டத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மற்றும் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 500 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

அதன்படி, உரிய நடவடிக்கைகளைப் பின்பற்றி, இத்திருத்தம் செப்டம்பர் 3, 2024 அன்று நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர், இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விவாதத்திற்கு அழைத்த அநுரவிற்கு ரணிலின் பதிலடி

விவாதத்திற்கு அழைத்த அநுரவிற்கு ரணிலின் பதிலடி

 

ரணிலின் வெற்றி உறுதி! திருக்கோவில் பிரசாரத்தில் பிள்ளையான் திட்டவட்டம்

ரணிலின் வெற்றி உறுதி! திருக்கோவில் பிரசாரத்தில் பிள்ளையான் திட்டவட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US