மக்களே அவதானம்! காலநிலை குறித்து விசேட அறிவிப்பு
நாட்டின் 09 மாவட்டங்களில் வெப்ப சுட்டெண், மனித உடலுக்கு அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சூரியன் தெற்கில் நகருவதால், இன்று முதல் செப்டெம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைக்கு நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நண்பகல் 12:11 மணிக்கு கோவிலன் முனை மற்றும் மல்லாகம் ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
09 மாவட்டங்களின் வெப்ப சுட்டெண்
இதற்கமைய முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இன்று வெப்ப சுட்டெண் அதிகமாக காணப்படும்.
குறித்த பகுதிகளில் வெப்பச் சுட்டெண் 39 முதல் 45 செல்சியஸ் வரையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் பொது மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், முடிந்தவரை நிழலான இடங்களை பயன்படுத்துமாறும், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
