நெடுந்தீவுக்கான அரச படகுச்சேவையை அதிகரிக்க ஏற்பாடு
நெடுந்தீவுக்கான அரச கடற் போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (22.06.2026) தொடக்கம் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் அதிகரிக்கப்பட்ட வகையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒவ்வொரு திங்களும் நெடுந்தீவில் இருந்து காலை 6.15 மணி, காலை 6.45 மணி ஆகிய நேரங்களில் குறிகாட்டுவான் நோக்கி புறப்பட்டு மீண்டும் குறிகாட்டுவானில் இருந்து காலை 7.30 மணி, காலை 8.30 மணி ஆகிய நேரங்களில் நெடுநதீவை நோக்கிச் செல்ல ஏற்பாடாகியுள்ளது.
மேலதிக அரச படகுகள்
அத்துடன் மாலைநேர சேவையில் தேவையேற்படின் மேலதிக அரச படகுகளை சேவையில் ஈடுபடுத்தவும் ஏற்பாடாகியுள்ளது.

நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள வடதாரகை, நெடுந்தாரகை என்பன திருத்த வேலைகள் முடிந்து தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.