இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி செல்லும் ஆட்கடத்தல் படகுகள்: அவுஸ்திரேலிய அரசாங்கம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை அடுத்து, கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் நான்கு ஆட்கடத்தல் படகுகள் அவுஸ்திரேலியாவை நோக்கி வந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் அவை தமது கடற்பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டதாக அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகுகள் தடுத்து நிறுத்தப்படல்
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அவுஸ்திரேலியாவின் எல்லைப் படையால் மேற்கொள்ளப்பட்ட, நடவடிக்கைகளின் போது, ஜூன் மாதத்தில் மாத்திரம் மொத்தம் 125 பேருடன் நான்கு படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் அனைத்து 125 பயணிகளும், பணியாளர்களும் பத்திரமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸின் தகவல்படி, 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே அதிக எண்ணிக்கையிலான படகு இடைமறிப்பு” என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ பிளஸில் இந்தியாவை இணைக்க முயற்சி: ரோ கன்னா |