விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் எம்பி கூறிய மகிழ்ச்சி தகவல்
விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்கவும் அவர்களுக்கான வீட்டுத்திட்டங்களில் மேலும் 10 இலட்சம் ரூபாய் அதிகரிக்கவும் அத்துடன் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(4) கிளிநொச்சியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளினுடைய தேவைகள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற செயற்குழுவின் கலந்துரையாடல் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.
அமெரிக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறிய விமானம்! பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விபத்து
கொடுப்பனவு
நாடாளுமன்ற செயற்குழு உறுப்பினர்களான சுகத் வசந்த டி சில்வா நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக இருந்த சட்டவரைபில் புதிய திருத்தங்களை உருவாக்க இருக்கின்றோம்.
அதாவது நாட்டில் 8.7 பேர் இயலாமை உடையவர்களாக காணப்படுகின்றார்கள் இவர்களுடைய தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் இவர்களுக்காக வழங்கப்படுகின்ற உதவித்தொகை கொடுப்பனவுகள் 20,000 ரூபாயில் இருக்கின்ற கொடுப்பனவை 50,000 அதிகரிக்கப்பட உள்ளதுடன் 10 லட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டங்களை மேலும் 10 லட்சம் ரூபாய் அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளும் அதேபோல ஏனைய திட்டங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்எஸ். முரளிதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் கிளிநொச்சி மாவட்ட பதில அரசாங்க அதிபர் மற்றும் துறை சார்ந்த திணைக்கள தலைவர்கள் விசேட தேவைக்கு உட்பட்டவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri