திருகோணமலையில் வெவ்வேறு சம்பவங்களில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - மொரவெவ பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்தொழில் சங்கத்தினால் நேற்று (26.12.2022) இரவு ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியின் போதே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மொரவெவ பகுதியைச் சேர்ந்த 27, 28, 30 வயதுடையவர்களே மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து
இதேவேளை குறித்த இசை நிகழ்வில் பங்கேற்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய இருவர் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இருவரும் பலத்த காயமடைந்துள்ளதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



