இலங்கை ஊடக நிறுவனங்களில் பெண்களுக்கு எதிர்நோக்கும் சிக்கல் - அம்பலமாகும் சம்பவங்கள்
இலங்கையில் உள்ள முக்கிய ஊடக நிறுவனங்களில் பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ள விடயம் சமூக ஊடகங்களில் கலந்துரையாடல்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் விசாரணைகளை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகத்துறை அமைச்சரும் தெரிவித்திருந்தார்.
இந்த வெளிப்பாடுகளில் பெரும்பாலும் அரச ஊடகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தனக்கு இதுவரை உத்தியோகபூர்வ முறைப்பாடு எனவும் கிடைக்கவில்லை என, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற எந்தவொரு உத்தியோகபூர்வ முறைப்பாடும் தனக்கு கிடைக்கவில்லை எனவும், ஆனால் இதுபோன்ற முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் நாளாந்த பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் தான், தொழில்முறை சக ஆண் ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்வதாக அச்சுறுத்தப்பட்டதாக ஊடகவியலாளர் சாரா கெல்லபத ட்விட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்டைன் செய்த பாலியல் குற்றங்களின் வெளிப்பாட்டுடன் 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கிய #MeToo பிரச்சாரத்தைப் போலவே, சாரா கெல்லபத ட்விட்டர் பதிவு, இலங்கையில் மேலும் பல பெண்களை தங்கள் அனுபவங்களைப் பகிரங்கப்படுத்தத் தூண்டியுள்ளது.
இது தொடர்பான விரிவான தொகுப்புடன் வருகிறது இந்த காணொளி,





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
