அமெரிக்க பிரஜைக்கு இலங்கையில் நடந்த கசப்பான சம்பவம்! அவரே வெளியிட்ட காணொளி
அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததோடு, நாடு முடக்கப்பட்டுள்ள காரணத்தினால் தான் தன்னுடைய 7 நாள் பயணத்தை இரத்து செய்து மீண்டும் நாடு திரும்பியதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுமார் 5 மணித்தியாலங்கள் மாத்திரமே தங்கியிருந்ததாகவும், நாடு திறக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை வெளிப்படையாக உலகிற்கு அறிவிக்குமாறு அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
‘‘நான் இலங்கையில் 5 மணித்தியாலங்கள் மாத்திரமே தங்கியிருந்தேன். நான் 7 நாட்கள் தங்கியிருக்க தீர்மானித்திருந்தேன். வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்புகொண்டன் பின்னரே என்னுடைய பயணத்தை திட்டமிட்டேன். அனைத்து விபரங்களையும் கேட்டறிந்தேன். அனைத்தும் வழமைப்போல் இடம்பெறுவதாகவும், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தடுப்பூசி அட்டை, பிசிஆர் சோதனையின் எதிர்மறை முடிவு மற்றும் வீசா போதும் என அவர்கள் தெரிவித்தனர்.
பல நாடுகளுக்குச் சென்று இடைமாற்று விமானம் மூலமே நான் இலங்கைக்கு சென்றேன். எனினும் அங்கு போக்குவரத்து வசதிகள் இல்லை, என்னுடைய நிறுவனத்தை தொடர்புகொள்ள முடியவில்லை. அடிப்படையில் இலங்கை முடக்கப்பட்டுள்ளது. எனினும் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
அங்கு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அதன் பின்னர் நிலைமை அறிந்துகொள்ள முச்சக்கர வண்டியில் சிறிது பயணித்து பார்த்தேன். பின்னர் நாடு திரும்ப தீர்மானித்தேன். நாடு திறக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை வெளிப்படையாக உலகிற்கு கூறுங்கள்‘‘ என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) இதுத் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி அவரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.