தமிழராகிய எமது இருப்பை தக்க வைக்க வேண்டியது நாம் தான்: ஈ.சரவணபவன்

Sri Lankan Tamils Tamils E Saravanapavan Government Of Sri Lanka
By Theepan Apr 02, 2023 12:24 AM GMT
Report

“எமது இருப்பை தக்க வைக்க நாம் தான் போராட வேண்டியிருக்கின்றது. எமது இந்தப் போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டு ஒவ்வொருவரும் கிளர்ந்தெழுந்து போராட வரவேண்டும்."என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

சங்கானை பேருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,வெடுக்குநாறிமலை ஆலய இடித்தழிப்புக்கு எதிராக வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். இவ்வாறு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை மக்கள் மயப்படுத்தப்படும்.

இப்போது போராட்டங்களே அருகிச் செல்லும் நிலைமைதான் காணப்படுகின்றது. 2001ஆம் ஆண்டு பொங்குதமிழ் எழுச்சியே பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றார்கள். அது எப்படி பல்கலைக்கழக மாணவர்களால் சாத்தியமாக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும்.

தமிழராகிய எமது இருப்பை தக்க வைக்க வேண்டியது நாம் தான்: ஈ.சரவணபவன் | Inbreeding For Tamil People In Srilanka

வீடு வீடாகச் சென்று பொங்கு தமிழுக்கு மக்கள் ஆதரவை திரட்டியமையால் சாத்தியப்பட்டது. போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்படும் போது தான் அவை வெற்றியடைய முடியும். இதனை நாங்கள் செய்யத் தவறுகின்றோமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இன்று இந்த இடத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு நூற்றுக்கணக்கானவர்களே வந்திருக்கின்றார்கள்.

வட்டுக்கோட்டையில் பல்லாயிரம் இன உணர்வாளர்கள் இருந்தாலும் அவர்கள் வரவில்லை. மக்களுக்கு எங்களுடைய போராட்டங்களின் தார்ப்பரியங்களை எடுத்துச் சொல்வதனூடாகத்தான் அவர்களை அணிதிரட்ட முடியும்.

போராட்டம் மக்கள்மயமாதல் வேண்டும்

காலிமுகத்திடல் போராட்டத்தையும் குண்டர்களை கொண்டு அடித்துடைத்து ஒழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் போராட்டக்காரர்களின் பக்கம் நின்று அவர்களை வெற்றியடைச் செய்தார்கள். அந்தப் போராட்டம் மக்கள் மயப்பட்டமையாலேயே வெற்றி பெற்றது. நாங்கள் கடந்த பத்தாண்டு காலமாக அறவழியில் இவ்வாறு சிறு சிறு போராட்டங்களை நடத்துகின்றோம்.

தமிழராகிய எமது இருப்பை தக்க வைக்க வேண்டியது நாம் தான்: ஈ.சரவணபவன் | Inbreeding For Tamil People In Srilanka

இப்போதுகூட குருந்தூர் மலை, கன்னியா வெந்நீர் ஊற்று, வெடுக்குநாறி, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை, கச்சதீவு புத்தர் சிலை என எல்லாவற்றுக்கும் திட்டுத்திட்டாகப் போராட்டம் நடத்தியிருக்கின்றோம். அவை வெற்றியடைந்துள்ளனவா? நாம் காத்திரமான போராட்டத்தை தொடர் போராட்டமாக நடத்த வேண்டும்.

இனவழிப்பு இப்போதும் நடக்கிறது

அடுத்த மாதம் எங்கள் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடைப்பிடிக்கவுள்ளோம். அதற்கும் இந்த ஆட்சியாளர்கள் தடைகளை ஏற்படுத்தலாம்.மக்கள் திரட்சியின் ஊடாகவே அதனை தகர்த்தெறிய முடியும்.

அன்று இனப்படுகொலை நடந்தது. இப்போது பண்பாட்டுப் படுகொலை, கலாசார படுகொலை நடந்து கொண்டிருக்கின்றது. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியே நாம் இனவழிப்பு இப்போதும் நடப்பதாகக் குறிப்பிட்டு இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம்.

எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில், தமிழினத்துக்கு விடிவு கிடைக்கும் வரையில் நாம் போராடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இந்த மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது. தமிழ் மக்களை ஒடுக்குவதற்காகத்தான் பயங்கரவாத தடைச் சட்டமே வந்தது. புதிய சட்டம் மிக ஆபத்தானது என்று சிங்களவர்களே சொல்லுகின்றனர்.

கருத்துச் சுதந்திரத்துக்கு பெரும் சவால் விடுக்கும் வகையில்தான் புதிய சட்டவரைவு இருக்கின்றது. ஊடகங்கள் மீது கிடுக்கிப்பிடி வரக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அதற்கு எதிராகவும் நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கச்சைத்தீவு பௌத்தர்களுக்கானது அல்ல

கச்சதீவு தமிழ் மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் ஒரு அடையாளமாக விளங்குகிறது. இவ்வாறான ஒரு நிலையில் கச்சதீவில் புத்தரை அமர வைத்துள்ள நிலையில் எமது வரலாறுகளை மாற்றி கச்சதீவை பௌத்தத்துடன் தொடர்புபட்ட பூமியாக மாற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

தமிழராகிய எமது இருப்பை தக்க வைக்க வேண்டியது நாம் தான்: ஈ.சரவணபவன் | Inbreeding For Tamil People In Srilanka

இவ்வாறான செயற்பாடுகளிடம் பெற்று வரும் நிலையில் இந்திய அரசானது இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்காமல் மௌனம் காப்பது கச்சதீவை பௌத்த பூமியாக ஏற்றுக் கொள்கிறதா? என்ற கேள்வி எமக்கு எழுகிறது.

தமிழ் மக்களின் நிலங்கள் தொல்லியல் என்ற போர்வையில் அவர்களின் வரலாற்று அடையாளங்களும் பூர்வீக நிலங்களும் அரசினால் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆகவே கச்சதீவையும் பௌத்த பூமியாக மாற்றுவதற்கு முன்னர் பாரத பிரதமர் நரேந்திர மோடி குறித்த விடயத்தில் தலையீடு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Thirunelvely, சொலோதென், Switzerland

14 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, திருநெல்வேலி, Markham, Canada

13 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US