கடமைகளை பொறுப்பேற்ற பின் வடமாகாண ஆளுநர் வழங்கிய வாக்குறுதி(video)
பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (22.05.2023) தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், என்னை வாழ்த்துவதற்கு வருகை தந்த மத குருமார் சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்கள். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தருமாறு கூறியிருக்கின்றார்கள்.
எனவே அந்த விடயத்தினை நான் சரியான முறையில் அணுகி அதற்கு தீர்வுகளை பெற்று தருவதற்கு முயற்சிப்பேன். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தருமாறு கூறியிருக்கின்றார்கள்.
எனவே அந்த விடயத்தினை நான் சரியான முறையில் அணுகி அதற்கு தீர்வுகளை பெற்று தருவதற்கு முயற்சிப்பேன்.
இந்த மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மதங்களும் தங்களுடைய தனித்துவமான மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.
அந்த வகையில் அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க நான் முயற்சிக்கின்றேன். அதேபோல வட மாகாண அவைத்தலைவர் மாகாண மக்கள் குறிப்பாக யாழ். மாவட்ட மக்களின் கொண்ட குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக்கூறியிருந்தார்.
ஏற்கனவே பாலியாறு சம்பந்தமான ஒரு பிரேரணையை தாங்கள் தயாரித்து வைத்திருப்பதாகவும் அதை முன்னெடுத்து செல்லுமாறும் கூறியிருக்கின்றார்.
அது சம்பந்தமாகவும் நான் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக உள்ளேன். யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை நான் உணர்ந்திருக்கின்றேன். நான் கூட இங்கு வருகின்றபோது குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியாக பிரச்சனையை உணர்ந்திருக்கின்றேன். எனவே அந்த பிரச்சனையயை தீர்க்க நிச்சியமாக முக்கியமாக கவனம் எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் இன்று (22.05.2023) காலை 9.20
மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கடமைகளை பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர் சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இரண்டாவது தடவையாக வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்கின்றார்.
முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மே 15ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மே 17 ஆம் திகதி பி.எஸ்.எம்.சாள்ஸ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய ஆளுநருக்கு வவுனியாவில் வரவேற்பு நிகழ்வு
இந்நிலையில் வட மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள பி. எம்.எஸ் சார்ள்ஸ் வரவேற்கும் நிகழ்வொன்று வவுனியாவில் இன்று (22.05.2023) இடம்பெற்றிருந்தது.
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகரசபை வளைவில் இருந்து வாகன பவனியாக அழைத்துவரப்பட்ட ஆளுனர் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் வலய கல்விப்பணிப்பாளரால் வரவேற்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து வவுனியா தனியார் விடுதியில் வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் வரவேற்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் வர்த்தகர் சங்கத்தின் செயலாளர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர், முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் உட்பட்ட உறுப்பினர்கள், கந்தசாமி கோவில் நிர்வாகத்தினர், வர்த்தகர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
