ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை திறந்து வைப்பு
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட பிரதான செயலாளர் பணிமனை மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு விழாவானது, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான செயலாளர் ஜோன் கெனத் தலைமையில் நேற்று (16.04.2024) நடைபெற்றுள்ளது.
அத்துடன், கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) மற்றும் மாவட்ட தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.
கணேசமூர்த்தி ஆகியோர் இதன்போது கலந்துகொண்டு காரியாலயத்தை திறந்து வைத்துள்ளனர்.
மனு கையளிப்பு
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிடம் தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் குருக்கள்மடம் பொது அமைப்பினர் வழங்கி வைத்துள்ளனர்.
திறப்பு விழாவில் கட்சியின் ஆதரவாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |