கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் ஆரம்பப்பிரிவு பாடசாலையில் வகுப்பறைக் கட்டடம் திறந்து வைப்பு
கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் ஆரம்பப் பிரிவு பாடசாலையில் இருந்த பழைய வகுப்பறைக் கட்டடமொன்று மீள் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பப் பிரிவு மாணவிகளின் பெற்றோர்களினால் மீள் புனரமைப்புச் செய்யப்பட்ட இப்பாடசாலையின் வகுப்பறைக் கட்டடிடத் திறப்பு விழா நேற்று(19.06.2024) நடைபெற்றிருந்தது.
கட்டடத்தின் புனரமைப்பு
வகுப்பறைக் கட்டிடத் தொகுதியினை திறந்து வைக்கும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அதிபர் நதீரா இஸ்மாயில் உத்தியோகபூர்வமாக திறந்து மாணவிகளின் பயன்பாட்டுக்காக கையளித்தார்.
சுமார் 80 வருடம் பழைமை வாய்ந்த கட்டிடத்தின் கூரையினை பாடசாலையின் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கல்வி அமைச்சின் அனுமதியுடன் இப்பாடசாலையின் பெற்றோர்களினால் மீளவும் திருத்தியமைக்கப்பட்டிருந்தது.
25 இலட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு இருந்த வகுப்பறைக் கட்டடத்தின் புனரமைப்பினை கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் ஆரம்பப் பிரிவு மாணவிகளின் பெற்றோர்களினால் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் பாடசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் ஹஸன் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பழைய மாணவிகள் உள்ளிட்ட பெரு எண்ணிக்கையிலான பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்