வவுனியா மாவட்டத்தின் புதிய சாரணத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு..!
வவுனியா மாவட்ட சாரணர் சங்கம் மற்றும் வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சாரணத் தலைவர்களுக்கான கலைக்கூறு -I பயிற்சிநெறியினை பூரணப்படுத்திய சாரணத் தலைவர்களுக்கான பயிற்சியும் அதனைத் தொடர்ந்து சின்னம் சூட்டும் நிகழ்வும் இன்று (24) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானத வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் நடைபெற்றது.
பலர் பங்கேற்பு
இந் நிகழ்வின் பயிற்சித்தலைவராக ப.அஜித்குமார், உதவி பயிற்சி தலைவர்களாக ரா.வரதராஜா, அ.பிரியதர்சினியும் பங்குபற்றியிருந்தனர்.
இப்பயிற்சியினை உதவி மாவட்ட ஆணையாளர் (பயிற்சி) ஒழுங்கமைத்திருந்தார்.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர், வவுனியா சாரண சங்கத்தின் செயலாளர், வவுனியா மாவட்ட ஆணையாளர், உதவி மாவட்ட ஆணையாளர்கள் பங்குபற்றி இருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
