முல்லைத்தீவில் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம் திறந்து வைப்பு
தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளை தலைமையகத்தின் கீழ் நந்திக்கடல் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட இராணுவப் படையணி பயிற்சிப் பாடசாலையானது தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி பாடசாலையாக அமைப்பதற்காக இராணுவத்தினரால் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சி பாடசாலை
அதற்கிணங்க, இப்பயிற்சிப் பாடசாலையை தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி பாடசாலையாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோனினால் நேற்று(07.04.2024) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஏற்கனவே பல்வேறு இடங்களில் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் கல்வித் திணைக்கள அதிகாரிகள் இராணுவ உயரதிகாரிகள் வடக்கு கிழக்கை சேர்ந்த பல பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |