கிளிநொச்சியில் புனிதபூமி மக்கள் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு!
புனிதபூமி மக்கள் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(01.03.2026) கிளிநொச்சியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் கணபதிப்பிள்ளை ஆனந்தமூர்த்தி (ஜேம்சன்) தலைமையில் இடம்பெற்ற கட்சி அங்குரார்ப்பண நிகழ்வில், உபதலைவர் தியாகராசா ஜெகதீஸ்வரன் செயலாளர் சசிகரன் மிதுலா உப செயலாளர் அருளாணந்தம் மதிவன்னன்,பொருளாளர் ஜெகநாதன் ரகுநாதன், கட்சியின் ஆலோசகர் கார்த்திகைசு யோகராசா, யாழ்.மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திருச்செல்வம் இரவீந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் பேபி வேலுப்பிள்ளை (தேசத்தாய்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொருளாதார நிலை வீழ்ச்சி
அங்குரார்ப்பண நிகழ்வில் தொடக்கவுரை நிகழ்த்திய புனிதபூமி மக்கள் கட்சியின் தலைவர் ஜேம்சன் கூறுகையில்,
வடக்கு - கிழக்கு மக்களின் பொருளாதார மேம்பாட்டினை இலக்காக கொண்டு இந்த கட்சியை அங்குரார்ப்பணம் செய்துள்ளோம். போருக்கு பிந்திய சூழலில் தமிழ் மக்கள் பொருளாதார ரீதியாக கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபக்கம் சமூக சீர்கேடுகளும், போதைப்பொருள் கலாச்சாரம் மலிந்துள்ளது.

இந்த நிலையில், இருந்து எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கான அரசியல் வெறுமையாக உள்ளது. அந்த அரசியல் வெறுமையை நிவர்த்தி செய்வதுதான் நம் முதன்மையான அரசியல் இலக்காகும்.
அதற்காக வடக்கு - கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் நாம் பணியாற்றவுள்ளோம். எங்களின் இந்த பணிக்கு மக்களிடம் இருந்து ஆதரவு வழங்கப்படுகிறது.
30 வருடங்களாக தூய்மையான இலக்குடன் பயணித்த நாம் இனிமேலும் அந்த தூய்மையான பணியை மக்களுக்காக முன்கொண்டு செல்வோம் என்றார்.

இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam