வவுனியாவில் 8 சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் 8 சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் இதுவரை இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாகவும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் முடிவுகள் நேற்று இரவு வெளியாகியுள்ளன.
அதில், மதவுவைத்தகுளம் பகுதியில் ஒருவருக்கும், நந்திமித்திரிகம பகுதியில் ஒருவருக்கும், தரணிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிவபுரம் பகுதியில் ஒருவருக்கும், கற்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், பெரியகோமரசன்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், ரம்பாவ பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஆறு பேருக்கும், மறவன்குளம் பகுதியில் இருவருக்கும், மணியர்குளம் பகுதியில் மூவருக்கும், சகாயாமாதாபுரம் பகுதியில் ஒருவருக்கும் என 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உண்மையை வீட்டில் கூறிய முத்து, ஷாக்கான விஜயா, ஆனால் ரோஹினி வைத்த டுவிஸ்ட்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri