தம்புள்ளைக்கு எதிரான போட்டியில் கண்டி அணிக்கு அபார வெற்றி
புதிய இணைப்பு
லங்கா பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் கண்டி அணி 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில், 223 என்ற சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
தம்புள்ளை அணியின் சார்பாக அதிகபட்சமாக குஷல் பெரேரா, 40 பந்துகளில் 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
கண்டி அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய வனிந்து ஹசரங்க, 35 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இரண்டாம் இணைப்பு
தம்புள்ளை அணிகெதிரான எல்பிஎல் தொடரின் 18 ஆட்டத்தில் கண்டி அணி சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 20 ஓவர் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கண்டி அணி சார்பில், ஆண்ட்ரே பிளெட்சர், கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அரைச்சதம் கடந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
எல்பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தம்புள்ளை மற்றும் கண்டி அணிகள் பலபரீட்ச்சை நடத்துகின்றன.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடும் கண்டி அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தினேஷ் சந்திமால் மற்றும் ஹன்று ப்ளட்சர் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
தம்புள்ளை அணி
தம்புள்ளை அணி சார்பில் இன்றைய போட்டியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ், குசல் பெரேரா, மார்க் சப்மன், இப்ராஹிம் சத்ரன், லஹிரு உதான, மொஹமட் நபி, துஷான் ஹேமந்த, சாமிக்க விக்கிரமசிங்க, அகில தனஞ்சய, நுவனிது பெர்னாண்டோ, நுவான் துஷார, நுவன் பிரதீப் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
மேலும் கண்டி ஃபால்கன்ஸ் அணி சார்பில் தினேஷ் சந்திமால், ஆண்ட்ரே பிளெட்சர், மொஹமட் ஹரீஸ், கமிந்து மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், வனிந்து ஹசரங்க, தசுன் ஷனக, ரமேஷ் மெண்டிஸ், கவிந்து பத்திரத்ன, ஷோரிபுல் இஸ்லாம், கசுன் ராஜித ஆகியோர் விளையாடுகின்றனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





















ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
