மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 68 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்

Covid-19 People Covid vaccine Batticaloa district
By Kumar Jul 27, 2021 04:10 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 68 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 68 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 22 பேரும், செங்கலடி வைத்திய அதிகாரிகள் பிரிவில் 11 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 10 பேர் உட்பட 68 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8275 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 116 பேர் உயிரிழந்துள்ளதுடன் 755 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இறப்புகளில் 69 வீதமான இறப்பானது 60வயதுக்கும் மேற்பட்டவர்களாகவுள்ளனர்.

மூன்றாவது அலை காரணமாக 7292 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 107 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 320221 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது. இதுவரையில் 142754 கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 311000 பேர் உள்ளனர். இவர்களில் 46 வீதமானவர்களுக்கு இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. முட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச வைத்தியசாலைகள், ஆதார வைத்தியசாலைகளில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் அப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள்,பொது இடங்களிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கிடைக்கப்பெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.

பெரும்பாலான ஆசிரியர்கள் முதலாவது கோவிட் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இரண்டாவது தடுப்பூசி ஒரு மாதத்திற்குப் பின்னர் வழங்கப்படும். வெளிநாடு செல்லவுள்ளவர்கள் வேறு தடுப்பூசிகளைப் பெறவேண்டுமானால் ஒன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US