தமிழரசுக் கட்சியின் மாநாடு வழக்கில் இரு தரப்பாக பிரிந்த சிறீதரன் - மாவை
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனும்(S. Shritharan), மாவை சேனாதிராஜாவும்(Mavai Senathirajah) வெவ்வேறு சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியதாக எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடகமையத்தில் இன்று(27.05.2024) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், சிறீதரன் மற்றும் மாவை சேனாதிராஜா இடையே வெவ்வேறு நிலைப்பாடுகள் காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
''கட்சியின் சார்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நான் உள்ளிட்ட மூவர் ஒரு நிலைப்பாட்டுடன் செயற்படுகின்றோம்.
ஆனால் மீதமுள்ள 4 பேரும் இரு தரப்பாக பிரிந்து வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டு செயற்படுகின்றனர்.
இதனை மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுத்துரைத்தேன். கட்சியின் முன்னணி அங்கத்தவர்கள் யாப்பை தெரியாதது போல் நடந்துகொள்வது தொடர்பிலும் விளக்கமளித்தேன்." என்றார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |