மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளின் கணவர்மார் உயிரிழப்பு
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வீதியூடாக மோட்டார்சைக்கிளில் மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குறித்த நபரும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
செட்டிகுளத்திற்கு மரண சடங்கொன்றிற்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் நோக்கி வீடு திரும்பிய போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்த 36 மற்றும் 38 வயது நபர்களே உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam